தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஜன 31, 2026 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பைனலில் ஜெர்மனி

ஹெர்னிங்: டென்மார்க், நார்வே, சுவீடனில், ஆண்களுக்கான ஐரோப்பிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 17வது சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதியில் குரோஷியா, ஜெர்மனி அணிகள் மோதின. ஜெர்மனி அணி 31-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் டென்மார்க் அணி 31-28 என, ஐஸ்லாந்தை வென்றது.

எக்ஸ்டிராஸ்

* அசாமில் நடக்கும் சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 79வது சீசனுக்கான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது. ரயில்வே, மேகாலயா அணிகள் மோதிய மற்றொரு போட்டி 2-2 என, 'டிரா' ஆனது.

* நேபாளத்தில், பெண்களுக்கான (19 வயது) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் வங்கதேச அணி 12-0 என, பூடானை வென்றது.

* மும்பை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றுக்கான முதல் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சகவீராங்கனை அகாங்க் ஷாவை வீழ்த்தினார்.

* கத்தார் தலைநகர் தோகாவில் நடக்கும் ஆசிய ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்தியாவின் கேதன் சாவ்லா 4-2 என, கத்தாரின் மோஹன்னா அலோபைட்லியை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் லட்சுமண் ரவாத் 3-4 என ஈரானின் ஷாஹின் சப்ஸியிடம் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us