sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

உலக விளையாட்டு செய்திகள்

/

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்


ADDED : ஜூலை 05, 2025 11:00 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெர்மனி ஜெயம்

சுவிட்சர்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான 'யூரோ' கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஜெர்மனி, போலந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 2-0 என வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் சுவீடன் அணி 1-0 என, டென்மார்க்கை வீழ்த்தியது.

பிரேசில் பிரமாதம்

குரோஷியா, செர்பியாவில் நடக்கும் பெண்களுக்கான (19 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் குரோஷிய அணி 3-1 என, கனடாவை தோற்கடித்தது.

நியூசிலாந்து கலக்கல்

இத்தாலியில் நடக்கும் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ரக்பி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 38-19 என்ற கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 32-22 என, இங்கிலாந்தை வென்றது.

அமெரிக்கா அசத்தல்

சுவிட்சர்லாந்தில் நடக்கும் உலக கோப்பை கூடைப்பந்து (19 வயது) தொடருக்கான காலிறுதியில் அமெரிக்க அணி 108-102 என்ற கணக்கில் கனடாவை வென்றது. மற்றொரு காலிறுதியில் நியூசிலாந்து அணி 84-79 என சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.

எக்ஸ்டிராஸ்* சீனாவில் நடக்கும் ஆசிய பாரா வில்வித்தை பெண்கள் 'காம்பவுண்டு' பிரிவு இரட்டையரில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, ஜோதி ஜோடி தங்கம் வென்றது. கலப்பு 'ரிகர்வ்' பிரிவு இரட்டையரில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், பாவ்னா ஜோடி தங்கம் கைப்பற்றியது.

* கஜகஸ்தானில் நடக்கும் உலக கோப்பை குத்துச்சண்டை பைனலுக்கு இந்தியாவின் மீனாட்சி (48 கி.கி.,), பூஜா ராணி (80 கி.கி.,), சாக் ஷி (54 கி.கி.,) உள்ளிட்டோர் முன்னேறினர். இதுவரை இந்தியாவுக்கு 11 பதக்கம் உறுதியானது.

* நெதர்லாந்து சென்றுள்ள சஞ்சய் தலைமையிலான இந்தியா 'ஏ' ஹாக்கி அணி, அயர்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்துக்கு எதிராக தலா 2, இங்கிலாந்து, பெல்ஜியத்துக்கு எதிராக தலா ஒரு போட்டியில் பங்கேற்கிறது.






      Dinamalar
      Follow us