தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'உலக' ஸ்குவாஷ்: அனாஹத் அசத்தல்

'உலக' ஸ்குவாஷ்: அனாஹத் அசத்தல்

'உலக' ஸ்குவாஷ்: அனாஹத் அசத்தல்


ADDED : ஜூலை 22, 2026 10:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 10:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒன்டாரியோ: உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரின் 'ரவுண்டு-16' போட்டிக்கு இந்தியாவின் அனாஹத் சிங், ஆர்யவீர் தேவன் முன்னேறினர்.

கனடாவில், உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், ஹாங்காங்கின் புய் யின் சோலே லோ மோதினர். இதில் அனாஹத் 3-0 (11-3, 11-1, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

ஆண்களுக்கான 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், தென் ஆப்ரிக்காவின் ஜோசப் பியஸ்ட் மோதினர். இதில் ஆர்யவீர் 3-0 (11-4, 11-3, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'ரவுண்டு-16' போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்ற 'ரவுண்டு-32' போட்டிகளில் இந்தியாவின் குர்வீர் சிங், யுஷா நபீஸ், சான்வி, ருத்ரா சிங், அனிகா தோல்வியடைந்து வெளியேறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us