/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி வெற்றி
/
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடி வெற்றி
ADDED : மே 17, 2025 10:54 PM

தோகா: உலக டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் மானுஷ், மானவ் ஜோடி வெற்றி பெற்றது.
கத்தார் தலைநகர் தோகாவில், உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்ஸ் பைனல்ஸ் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி, சுலோவேனியாவின் பீட்டர் ஹ்ரிபார், டேனி கோசுல் ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 3-0 (11-7, 11-8, 11-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அய்ஹிகா, சுதிர்தா முகர்ஜி ஜோடி, துருக்கியின் ஓஸ்கே யில்மாஸ், ஈஸ் ஹராக் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 3-2 (4-11, 11-9, 10-12, 11-9, 11-7) என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் யாஷஸ்வினி, தியா ஜோடி 3-1 (9-11, 11-2, 11-9, 11-8) என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அசெல் எர்கேபேவா, மார்கபோ மாக்டீவா ஜோடியை தோற்கடித்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, தாய்லாந்தின் சுதாசினி மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீஜா 1-4 (11-9, 8-11, 6-11, 5-11, 2-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.