தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக பளுதுாக்குதல்: தனுஷ் வெண்கலம்

உலக பளுதுாக்குதல்: தனுஷ் வெண்கலம்

உலக பளுதுாக்குதல்: தனுஷ் வெண்கலம்


ADDED : செப் 20, 2024 10:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 10:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லியோன்: உலக ஜூனியர் பளுதுாக்குதலில் இந்தியாவின் தனுஷ் வெண்கலம் வென்றார்.

ஸ்பெயினில், உலக ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் தனுஷ் லோகநாதன் 17, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 107 கிலோ பளுதுாக்கி 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்ற தனுஷ், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 124 கிலோ துாக்கி, 13வது இடத்தை கைப்பற்றினார்.

ஒட்டுமொத்தமாக 231 கிலோ (107+124) பளுதுாக்கிய தனுஷ், 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் உலக ஜூனியர் பளுதுாக்குதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார்.

வியட்நாமின் டுவாங் (253 கிலோ), ஜப்பானின் டொமாரி கோடாரோ (247 கிலோ) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.

பெண்களுக்கான 45 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பாயல் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 68, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 82 என, ஒட்டுமொத்தமாக 150 கிலோ பளுதுாக்கிய பாயல், 6வது இடம் பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us