ADDED : ஜூலை 19, 2025 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உலக தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 13-21ல் ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் சமீபத்தில் மொனாக்கோவில் நடந்த 'டைமண்ட் லீக்' தடகளத்தில் இந்தியாவின் அவினாஷ் சபிள் 30, பங்கேற்றார்.
3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டியில் களமிறங்கிய இவர், தடையை தாண்டி, நீரில் குதித்த போது, முன்னாள் சென்ற வீரர் மீது, மோதி விழுந்தார். இதனால் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் விலகினார். தற்போது இவரது வலது முழங்காலில் தசை நாள் கிழிந்துள்ளது உறுதியானது.
காமன்வெல்த் விளையாட்டு 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் பதக்கம் (வெள்ளி) வென்ற முதல் இந்தியர், நடப்பு ஆசிய சாம்பியன் ஆன அவினாஷ், முழங்கால் காயம் சரியாக குறைந்தது 6 மாதம் வரை தேவைப்படும். இதனால் உலக தடகளத்தில் இருந்து விலகுவார் எனத் தெரிகிறது.