தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அரையிறுதிக்கு முன்னேறினார் திவ்யா * உலக கோப்பை செஸ் தொடரில்...

அரையிறுதிக்கு முன்னேறினார் திவ்யா * உலக கோப்பை செஸ் தொடரில்...

அரையிறுதிக்கு முன்னேறினார் திவ்யா * உலக கோப்பை செஸ் தொடரில்...


ADDED : ஜூலை 21, 2025 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 11:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார் திவ்யா.

ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.

'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் காலிறுதிக்கு, முதன் முறையாக ஹரிகா, ஹம்பி, வைஷாலி, திவ்யா என நான்கு வீராங்கனைகள் முன்னேறி, வரலாறு படைத்தனர். அடுத்து நடந்த காலிறுதியில் ஹம்பி, சீனாவின் யூஜின் சாங்கை சாய்த்தார்.

உலக செஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆனார் ஹம்பி 38. வைஷாலி, 0.5-1.5 என சீனாவின் ஜோங்இயிடம் வீழ்ந்தார்.

திவ்யா அபாரம்

மற்றொரு காலிறுதியில் 36 வயது ஹரிகா, 19 வயது திவ்யாவை சந்தித்தார். இவர்கள் மோதிய முதல் இரு போட்டி 'டிரா' ஆக, ஸ்கோர் 1.0-1.0 என சமனில் இருந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய, 'டை பிரேக்கர்' நடந்தது.

முதலில் இரு போட்டி நடந்தது. முதல் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா. 26 வது நகர்த்தலில் முந்தினார். 33வது நகர்த்தலில் தனது ராணியை இழந்த ஹரிகா, 57 வது நகர்த்தலில் தோற்றார். திவ்யா 2.0-1.0 என முன்னிலை பெற்றார்.

கட்டாய வெற்றி

'டை பிரேக்கரின்' 2வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஹரிகா களமிறங்கினார். இம்முறை கருப்பு நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 76 வது நகர்த்தலில் வென்றார். முடிவில் திவ்யா 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். உலக செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் இந்திய வீராங்கனை, இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார்.

இன்று அரையிறுதி

இன்று துவங்கும் அரையிறுதி போட்டிகளில் ஹம்பி ('நம்பர்-5')-சீனாவின் லெய் டிங்ஜீ ('நம்பர்-3'), திவ்யா ('நம்பர்-18')-ஜோங்இ (சீனா, 'நம்பர்-8') மோத உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us