தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ ஜூனியர் உலக தடகளம்: ஆர்த்தி வெண்கலம்

ஜூனியர் உலக தடகளம்: ஆர்த்தி வெண்கலம்

ஜூனியர் உலக தடகளம்: ஆர்த்தி வெண்கலம்


ADDED : ஆக 31, 2024 11:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2024 11:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லிமா: பெருவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது.

பெண்களுக்கான 10,000 மீ., நடை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் 17 வயது வீராங்கனை ஆர்த்தி பங்கேற்றார். இவர், 44 நிமிடம், 39.39 வினாடி நேரத்தில் வந்து வெண்கலப் பதக்கம் தட்டிச் சென்றார். இது, இத்தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கம்.

ஆண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டம் நடந்தது. இந்தியாவின் ரிஹான் சவுத்ரி, அன்குல், அபிராம் பிரமோத், ஜெய் குமார் இடம் பெற்ற அணி, 3 நிமிடம், 08.10 வினாடி நேரத்தில் வந்தது. ஒட்டுமொத்தமாக 3வது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது.

பெண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சந்திரமோல், கனிஷ்டா, நீரு பதக், ஷ்ரவானி கூட்டணி, (3 நிமிடம், 40.43 வினாடி) 9வது இடம் பிடிக்க, பைனல் ('டாப்-8' மட்டும்) வாய்ப்பை இழந்தது.

பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்திலும், ருஜுலா, நியோல் அனா, அபிநயா, சுதீக்சா இடம் பெற்ற இந்திய அணி (45.31 வினாடி) 9வது இடம் பெற, பைனல் வாய்ப்பு நழுவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us