/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * உலக பாரா ஈட்டி எறிதலில்...
/
இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * உலக பாரா ஈட்டி எறிதலில்...
இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * உலக பாரா ஈட்டி எறிதலில்...
இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * உலக பாரா ஈட்டி எறிதலில்...
ADDED : செப் 30, 2025 10:57 PM

புதுடில்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் சுமித், சந்திப் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப் 44 பிரிவு பைனல் நடந்தது. 5வது வாய்ப்பில் அதிகபட்சம் 62.82 மீ., துாரம் எறிந்த இந்தியாவின் சந்திப், தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 15 செ.மீ., குறைவாக எறிந்த சக வீரர் சந்தீப் (62.67 மீ.,) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சுமித் 'ஹாட்ரிக்'
ஈட்டி எறிதலில் எப் 64 பிரிவில் இந்திய சார்பில் சுமித் அன்டில் 71.37 மீ., துாரம் எறிந்து, தங்கம் வென்றார். கடந்த 2023 (பாரிஸ்), 2024 (கோபே), தற்போது 2025 என தொடர்ந்து மூன்று உலக சாம்பியன்ஷிப்பில் அசத்திய இவர் 'ஹாட்ரிக்' தங்கம் கைப்பற்றினார்.
யோகேஷ் 'வெள்ளி'
ஆண்களுக்கான வட்டு எறிதல் எப். 56 பிரிவு பைனல் நடந்தது. இந்தியா சார்பில் யோகேஷ் கதுனியா பங்கேற்றார். 42.49 மீ., எறிந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
பாரா உலக தடகளத்தில் யோகேஷ் வென்ற நான்காவது பதக்கம் இது. முன்னதாக 2023 (பாரிஸ்), 2024ல் (கோபே) வெள்ளி, 2019ல் (துபாய்) வெண்கலம் வென்றுள்ளார்.
நைப் சாதனை
ஆண்களுக்கான 100 மீ., டி 44 பைனலில் சவுதி அரேபியாவின் நைப் அல்மஸ்ராஹி (10.94 வினாடி), 200 மீ., டி 35 பைனலில் ரஷ்யாவின் டேவிட் (23.01), 400 மீ., டி 20 பிரிவில் ஸ்பெயினின் ஜோஷ் மெஜியா (47.12), 400 மீ., டி 54 பிரிவில் துனிஷியாவின் கார்பி (44.96), புதிய உலக சாதனை படைத்து தங்கம் கைப்பற்றினர்.
முன்னேற்றம்
இந்தியா இதுவரை தலா 4 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 9 பதக்கம் வென்று பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியது. முதல் மூன்று இடத்தில் பிரேசில் (7 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலம், மொத்தம் 27), போலந்து (6+1+5=12), சீனா (5+7+4=16) உள்ளன.