/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மகேந்திர குர்ஜார் உலக சாதனை * உலக பாரா தடகளத்தில்...
/
மகேந்திர குர்ஜார் உலக சாதனை * உலக பாரா தடகளத்தில்...
மகேந்திர குர்ஜார் உலக சாதனை * உலக பாரா தடகளத்தில்...
மகேந்திர குர்ஜார் உலக சாதனை * உலக பாரா தடகளத்தில்...
ADDED : மே 26, 2025 09:59 PM

நாட்வில்: சுவிட்சர்லாந்தில் 6வது உலக பாரா தடகள கிராண்ட் ப்ரி போட்டி நடந்தது. ஆண்களுக்கான எப்.42 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் பங்கேற்றார் மகேந்திர குர்ஜார் 27. ராஜஸ்தானை சேர்ந்த இவர், முதல் இரு வாய்ப்பில் 56.11, 55.51 மீ., துாரம் எறிந்தார்.
மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 61.17 மீ., துாரம் எறிந்தார். இது புதிய உலக சாதனை ஆனது. இதற்கு முன் 2022ல் பிரேசிலின் ராபர்ட்டோ புளோரியானி, 59.19 மீ., துாரம் எறிந்து இருந்தார். கடைசி 3 வாய்ப்பில் மகேந்திர குர்ஜார் (58.54, 57.25, 58.07 மீ.,) ஏமாற்றினார். எனினும் தங்கம் கைப்பற்றி அசத்தினார்.
100 மீ., டி 46 பிரிவில் இந்தியாவின் பெருமாள் சாமி சந்தனகுமார், 12.31 வினாடியில் வந்து, வெள்ளி வென்றார். 400 மீ., (டி 11) போட்டியில் இந்தியாவின் மூர்த்தி பிரகதீஷ்வர ராஜா (01 நிமிடம், 01:59 வினாடி) இரண்டாவது இடம் பெற்றார். ஈட்டி எறிதல் எப் 64 பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் அதிகபட்சம் 72.35 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார்.