/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
யூத் மல்யுத்தம்: இந்தியா அபாரம்
/
யூத் மல்யுத்தம்: இந்தியா அபாரம்
ADDED : ஜூன் 25, 2024 10:22 PM

அம்மான்: யூத் மல்யுத்த போட்டியில் இந்தியா 4 தங்கம் கைப்பற்றியது.
ஜோர்டானில் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. மூன்றாவது நாளான நேற்று இந்திய நட்சத்திரங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 'பிரீஸ்டைல்' பெண்களுக்கான 43 கிலோ போட்டி பைனலில் இந்தியாவின் காஷிஷ் குர்ஜார், 10-0 என ஜப்பானின் ஹருவாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நேஹா, 10-0 என சீன வீராங்கனை ஜின்யு வாங்கை சாய்த்து தங்கம் தட்டிச் சென்றார். 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அஷ்வினி, பைனலில் சீனாவின் செங்வெய்யை 2-0 என வீழ்த்தி, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். 73 கிலோ பிரிவில் அசத்திய இந்தியாவின் காஜல், தன் பங்கிற்கு தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு பைனலில் தோற்ற இந்திய வீரர் ஓம்கர் பாபாசாகேப், வெள்ளிப்பதக்கம் பெற்றார். 71 கிலோ பிரிவில் இந்தியாவின் நிஷாந்த், வெள்ளி கைப்பற்றினார். இதுவரை இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 6 பதக்கம் வென்றுள்ளது.