/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மல்யுத்தம்: தீபக் புனியா தேர்வு
/
மல்யுத்தம்: தீபக் புனியா தேர்வு
ADDED : ஏப் 29, 2024 10:26 PM

புதுடில்லி: உலக ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச் சுற்றில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தீபக் புனியா, சுமித், நிஷா உள்ளிட்டோர் தேர்வாகினர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான உலக தகுதிச் சுற்று வரும் மே 9-13ல் நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் கிர்கிஸ்தானில் நடந்த ஆசிய ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் மீண்டும் தேர்வாகினர். ஏற்கனவே பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வினேஷ் போகத் (50 கிலோ), அன்ஷு மாலிக் (57), ரீத்திகா (76) தேர்வு செய்யப்படவில்லை.
'பிரீஸ்டைல்' பிரிவுக்கு அமன் (57 கிலோ), தீபக் புனியா (86), சுமித் (125) உள்ளிட்டோர் தேர்வாகினர். பெண்கள் பிரிவில் மான்சி (62 கிலோ), நிஷா (68) தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய அணி
'பிரீஸ்டைல்': அமன் (57 கிலோ), ஜெய்தீப் (74), தீபக் புனியா (86), தீபக் (97), சுமித் (125).
'கிரிகோ-ரோமன்': சுமித் (60 கிலோ), அஷு (67), விகாஸ் (77), சுனில் குமார் (87), நிதேஷ் (97), நவீன் (130).
பெண்கள்: மான்சி (62 கிலோ), நிஷா (68).

