ADDED : ஏப் 21, 2024 09:55 PM

பிஷ்கெக்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டிக்கான 'கிரிகோ-ரோமன்' எடைப்பிரிவு தகுதிச் சுற்றில் சுனில், விகாஸ், நிதேஷ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஏமாற்றினர்.
கிர்கிஸ்தானில் ஆசிய ஒலிம்பிக் மல்யுத்த தகுதி போட்டி நடந்தது. கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான 'கிரிகோ-ரோமன்' எடைப்பிரிவு போட்டிகள் நடந்தன. இதில் 87 கிலோ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுனில் குமார், ஜப்பானின் சோ சகாபே மோதினர். இதில் சுனில் குமார் 5-1 என வெற்றி பெற்றார். அடுத்து நடந்த காலிறுதியில் சுனில் 2-4 என உஸ்பெகிஸ்தானின் ஜல்காஸ்பே பெர்டிமுராடோவிடம் தோல்வியடைந்தார்.
மற்ற எடைப்பிரிவில் இந்தியாவின் சுமித் (60 கிலோ), அஷு (67) தகுதிச் சுற்றோடு திரும்பினர். நேரடியாக காலிறுதியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான விகாஸ் (77 கிலோ), நிதேஷ் (97), நவீன் (130) தோல்வியை தழுவினர்.
