உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 19, 2026 11:35 PM

அ நிறம் | அளவு
புடாபெஸ்ட்: 'ரேங்கிங் சீரிஸ்' மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை காஜல் தங்கம் வென்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், 'ரேங்கிங் சீரிஸ்' மல்யுத்த தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 76 கிலோ பிரிவு பைனலில், 'நடப்பு உலக சாம்பியன்' (20 வயது) இந்தியாவின் காஜல், அமெரிக்காவின் டைமண்ட் பிரிசியஸ் கில்போர்டை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம். ஏற்கனவே அமன் ஷெராவத், நேஹா தங்கம் வென்றிருந்தனர்.
பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் அன்டிம் பங்கால் (53 கிலோ), நேஹா சர்மா (57 கிலோ) வெள்ளி வென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை நிஷு (53 கிலோ) வெண்கலம் கைப்பற்றினார்.
இதுவரை இந்தியாவுக்கு 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என, 12 பதக்கம் கிடைத்துள்ளன.
