இந்தியாவுக்கு ஆறு தங்கம் * ஆசிய மல்யுத்தத்தில் அபாரம்
இந்தியாவுக்கு ஆறு தங்கம் * ஆசிய மல்யுத்தத்தில் அபாரம்
ADDED : மே 25, 2026 11:31 PM

டா நாங்: ஆசிய மல்யுத்தத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 தங்கப்பதக்கம் கிடைத்தன.
வியட்நாமில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் (17, 23 வயதுக்கு உட்பட்ட) தொடர் நடக்கிறது. 23 வயது பிரிவு, பெண்களுக்கான 57 கிலோ பைனலில் இந்தியாவின் தப்ஸ்யா, கஜகஸ்தானின் ஆல்டினை சந்தித்தார்.
இதில் தப்ஸ்யா 4-0 என வென்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
53 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் முஸ்கான், 6-2 என வியட்நாமின் நிகுவேனை சாய்த்து, தங்கம் வென்றார். 65 கிலோ பைனலில் இந்தியாவின் புல்கித், மங்கோலியாவின் நர்காஜித்தை 'நாக் அவுட்' செய்து, தங்கப்பதக்கம் பெற்றார். இந்தியாவின் பாக்யஸ்ரீ (62 கிலோ), 4-0 என கஜகஸ்தானின் துபெக்கை வீழ்த்தி, தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 97 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் விக்கி, 7-5 என உஸ்பெகிஸ்தானின் போயனோவை சாய்த்தார். 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அக்சய், 4-2 என என கஜகஸ்தானின் எலமானை வீழ்த்தினார்.
68 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் மான்சி, 76 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் காஜல் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை இந்தியா 9 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கம் வென்றுள்ளது.
