தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு 10 பதக்கம் * ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்

இந்தியாவுக்கு 10 பதக்கம் * ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்

இந்தியாவுக்கு 10 பதக்கம் * ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்


ADDED : ஏப் 01, 2025 12:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 12:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்மான்: ஜோர்டானில், சீனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடந்தது. இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் உதித் குமார், ஜப்பானின் டகாரா சூடா மோதினர். இதில் உதித் குமார் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

மற்றொரு பைனலில் (92 கிலோ) இந்தியாவின் தீபக் புனியா, ஈரானின் அமிர்ஹொசைன் பிக்லரை சந்தித்தார். இதில் 0-10 என தோல்வியடைப்த தீபக் புனியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான 125 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் தினேஷ் 14-12 என துர்க்மெனிஸ்தானின் சரபாரோவை வீழ்த்தினார். இத்தொடரில் இந்தியா, 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கம் கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us