தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய மல்யுத்தம்: ஹர்தீப் 'தங்கம்'

ஆசிய மல்யுத்தம்: ஹர்தீப் 'தங்கம்'

ஆசிய மல்யுத்தம்: ஹர்தீப் 'தங்கம்'


ADDED : ஜூன் 24, 2025 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2025 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உங் டாவ்: வியட்நாமில் 17 வயதுக்குட்பட்ட நட்சத்திரங்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. கிரிகோ ரோமன் பிரிவில் போட்டிகள் நடந்தன. 110 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் ஹர்தீப் பங்கேற்றார். பைனலில் சீனாவின் சுவான்கி வெய்யை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஆதித்ய திலீப், கஜகஸ்தானின் குமாருலி மோதினர். இதில் ஆதித்ய திலீப் 0-8 என்ற கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 60 கிலோ பிரிவில் இந்தியாவின் ரித்தேஷ், வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தென் கொரியாவின் ஜியோல்கை 10-0 என சாய்த்தார்.

இந்தியாவின் நிதின் (92 கிலோ), காலிறுதியில் 5-6 என கஜகஸ்தான் வீரர் டாய்ஷியிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 8-2 என சீனாவின் யாங் ஜினை சாய்த்தார்.

இதுவரை இந்தியா 1 தங்கம், 1 வெண்கலம், 2 வெள்ளி என 4 பதக்கம் வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us