தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மல்யுத்தம்: ஹர்ஷிதா 'தங்கம்'

மல்யுத்தம்: ஹர்ஷிதா 'தங்கம்'

மல்யுத்தம்: ஹர்ஷிதா 'தங்கம்'


ADDED : ஜூலை 19, 2025 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 11:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புடாபெஸ்ட்: ஹங்கேரியில் சர்வதேச மல்யுத்த தரவரிசை தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடந்தன. 72 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹர்ஷிதா, நான்கு முறை ஆசிய சாம்பியன் ஆன, கஜகஸ்தானின் ஜமிலியாவை எதிர்கொண்டார். இதில் 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஹர்ஷிதா, தங்கப் பதக்கம் வசப்படுத்தினார்.

53 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் 20 வயது வீராங்கனை அன்டிம் பங்கல், ரஷ்யாவின் நடாலியா மாலிஷேவா மோதினர். இதில் அன்டிம் 7-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் நேஹா, 0-4 என அமெரிக்காவின் ஹெலன் லுாயிசிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 50 கிலோ காலிறுதியில் தோற்ற இந்தியாவின் நீலம், ரெப்பிசாஜ்' போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் சோகோலாவா, செனியா என இரு ரஷ்ய வீராங்கனைகளை அடுத்தடுத்து வீழ்த்திய நீலம், வெண்கலம் வசப்படுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us