/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் அன்டிம் * தேசிய மல்யுத்தத்தில்...
/
தங்கம் வென்றார் அன்டிம் * தேசிய மல்யுத்தத்தில்...
ADDED : டிச 13, 2025 11:06 PM

ஆமதாபாத்: தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் அன்டிம் பங்கல் தங்கம் வென்றார்.
ஆமதாபாத்தில் தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடந்தது. முதல் நாளில் பெண்களுக்கான 10 பிரிவில் போட்டிகள் நடந்தன. 55 கிலோ பிரிவு பைனலில், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அன்டிம் பங்கல் 21, பங்கேற்றார். இதன் பைனலில் சக வீராங்கனை ஜோதியை சாய்த்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். அரையிறுதியில் தோற்ற கீர்த்தி, ஹன்ஷிகாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தன.
57 கிலோ பிரிவு பைனலில் மணிஷா தங்கம் வென்றார். தவிர நீலம் (50), ராஜ்னிதா (59), புல்கிட் (65), ஹரெய்தா (72), ஜோதி (76) என ஹரியானாவை சேர்ந்த வீராங்கனைகள் தங்கம் வசப்படுத்தினர்.
இதையடுத்து 190 புள்ளியுடன் ஹரியானா பெண்கள் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த இரு இடங்களை ரயில்வேஸ் (144), டில்லி (112) கைப்பற்றின.

