/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் டாப்ஸ்யா * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
/
தங்கம் வென்றார் டாப்ஸ்யா * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
தங்கம் வென்றார் டாப்ஸ்யா * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
தங்கம் வென்றார் டாப்ஸ்யா * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
ADDED : ஆக 21, 2025 10:33 PM

சமோகோவ்: பல்கேரியாவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன.
இதன் அரையிறுதியில் இந்தியாவின் டாப்ஸ்யா, நடப்பு சாம்பியன், ஜப்பானின் சொவாகா உசிடாவை 4-3 என்ற கணக்கில் சாய்த்து, 'திரில்' வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த பைனலில் டாப்ஸ்யா, நார்வேயின் பெலிசிடாஸ் டொமாஜெவா மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டாப்ஸ்யா, 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உலக சாம்பியன்ஷிப்பில் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். பெண்களுக்கான 68 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீஷ்டி, ஜப்பானின் ஹோஷினோ மோதினர். இதில் ஸ்ரீஷ்டி 0-7 என தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
55 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரீனா, 11-1 என ருமேனியாவின் அலெக்சாண்ட்ராவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.
76 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரியா, செர்பியாவின் ஈவ்லினை 10-0 என வென்று, பைனலுக்குள் நுழைந்தார்.
50 கிலோ காலிறுதியில் இந்தியாவின் சுருதி, 4-0 என போலந்தின் அனாவை சாய்த்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.

