தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உஷு: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

உஷு: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

உஷு: இந்தியாவுக்கு 2 வெண்கலம்


ADDED : மார் 29, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 09:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டியான்ஜின்: உலக உஷு தொடரில் இந்தியாவுக்கு 2 வெண்கலம் உறுதியானது.

சீனாவின் டியான்ஜின் நகரில், உலக உஷு சாம்பியன்ஷிப் 10வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் அனு, சீனாவின் ஜாங் லினிங்கிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான அரையிறுதியில் ஏமாற்றிய கவுதம் மன்காஸ், வெண்கலத்தை கைப்பற்றினார்.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் உபேந்திரோ, எகிப்தின் அகமது முகமதுவை தோற்கடித்தார். இந்தியாவின் பாமா ஹெய்பா சிங், செனகலின் அலிமோவை வென்றார். மற்ற அரையிறுதியில் இந்தியாவின் யுவராஜ் (எதிர்: ஜிவியெல் பன்டாலி, பிலிப்பைன்ஸ்), விக்டர் (எதிர்: சையது கரீம் முகமது, எகிப்து) வெற்றி பெற்றனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 6 பதக்கம் உறுதியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us