தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உஷூ: இந்தியாவுக்கு 4 பதக்கம்

உஷூ: இந்தியாவுக்கு 4 பதக்கம்

உஷூ: இந்தியாவுக்கு 4 பதக்கம்


ADDED : செப் 07, 2025 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரேசிலியா: உலக உஷூ தொடரில் இந்தியாவுக்கு 4 பதக்கம் கிடைத்தது.

பிரேசிலில், உலக உஷூ சாம்பியன்ஷிப் 17வது சீசன் நடந்தது. பெண்களுக்கான 'சாண்டா' பிரிவு பைனலுக்கு, இந்தியாவின் அபர்ணா (52 கிலோ), கரீனா கவுசிக் (60 கிலோ), ஷிவானி (75 கிலோ) முன்னேறினர். உலக உஷூ வரலாற்றில், முதன்முறையாக ஒரு சீசனில் 3 இந்திய வீராங்கனைகள் பைனலுக்குள் நுழைந்தனர். பைனலில் ஏமாற்றிய இவர்கள், வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தனர்.

ஆண்களுக்கான 'சாண்டா' பிரிவு அரையிறுதியில் (56 கிலோ) இந்தியாவின் சாகர் தஹியா 0-2 என, பிலிப்பைன்சின் கார்லஸ் பேலோஸ் ஜூனியரிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் விக்ராந்த் (75 கிலோ), காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இத்தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 4 பதக்கம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us