தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உஷு: இந்தியாவுக்கு 24 பதக்கம்

உஷு: இந்தியாவுக்கு 24 பதக்கம்

உஷு: இந்தியாவுக்கு 24 பதக்கம்


ADDED : மார் 16, 2026 10:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 10:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏதென்ஸ்: கிரீசின் ஏதென்ஸ் நகரில் 6வது அக்ரோபோலிஸ் சர்வதேச உஷு ஓபன் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'நன்-குவான்' பிரிவில் இந்தியாவின் யாஷ் நாம்தியோ தங்கம் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், 'நான்-கன்' பிரிவிலும் தங்கம் வசப்படுத்தினார். 'நன் தாவோ' பிரிவில் களமிறங்கிய யாஷ், வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார்.

பெண்களுக்கான (18 வயது பிரிவு) 52 கிலோ, 'சாண்டா' போட்டியில் இந்தியாவின் அனுஷ்கா, தங்கம் கைப்பற்றினார். 60 கிலோ சாண்டா, சீனியர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி, தங்கம் வென்றார்.

15 வயது, சாண்டா பிரிவில் (42 கிலோ) சபினி முண்டா, முதலிடம் பிடித்தார். 15வது 'டபுள் வெப்பன்' பிரிவில் இந்திய வீராங்கனை கர்லா அனைரா, 'நன்-கன்' சீனியர் பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் (40-49 கிலோ) தங்கம் கைப்பற்றினர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணி, 7 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்றது. இது கடந்த ஆண்டை விட அதிகம். முன்னதாக 2025ல் இந்தியா 22 பதக்கம் (9 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றிருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us