/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சாதிக்குமா இளம் இந்தியா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
/
சாதிக்குமா இளம் இந்தியா: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
ADDED : அக் 18, 2024 09:45 PM

ஜோகர்: ஜோகர் கோப்பை ஹாக்கியில் இளம் இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது.
மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் இன்று துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான், நியூசிலாந்து, மலேசியா என 6 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் அக். 26ல் நடக்கும் பைனலில் விளையாடும்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற சீனியர் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் பயிற்சியின் கீழ் களமிறங்கும் இந்திய அணி, தனது முதல் போட்டியில் இன்று ஜப்பானை சந்திக்கிறது. ஜப்பானுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 2 போட்டியிலும் (2022, 2023) இந்திய அணி வெற்றி பெற்றதால் மீண்டும் சாதிக்கலாம். அதன்பின் பிரிட்டன் (அக். 20), மலேசியா (அக். 22), ஆஸ்திரேலியா (அக். 23), நியூசிலாந்து (அக். 25) அணிகளை எதிர்கொள்கிறது.
ஜோகர் கோப்பையில் 7 முறை பைனலுக்கு முன்னேறிய இந்தியா, மூன்று முறை (2013, 2014, 2022) சாம்பியன் பட்டம் வென்றது. நான்கு முறை (2012, 2015, 2018, 2019) இரண்டாவது இடம் பிடித்தது.
இந்திய அணி கேப்டன் அமிர் அலி கூறுகையில், ''புதிய தலைமை பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ் பயிற்சியின் கீழ், இந்திய அணி சிறப்பான முறையில் தயாராகி உள்ளது,'' என்றார்.