/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹர்ஷித்தா இரண்டு தங்கம் * கேலோ இந்தியா விளையாட்டில்
/
ஹர்ஷித்தா இரண்டு தங்கம் * கேலோ இந்தியா விளையாட்டில்
ஹர்ஷித்தா இரண்டு தங்கம் * கேலோ இந்தியா விளையாட்டில்
ஹர்ஷித்தா இரண்டு தங்கம் * கேலோ இந்தியா விளையாட்டில்
ADDED : மே 06, 2025 11:07 PM

பாட்னா: கேலோ இந்தியா விளையாட்டு சைக்கிளிங் போட்டியில் இரண்டு தங்கம் வென்றார் ஹர்ஷித்தா.
பீஹாரில், 'கேலோ இந்தியா யூத்' விளையாட்டு 7வது சீசன் நடக்கிறது. துப்பாக்கி சுடுதல், சைக்கிளிங் பந்தயம், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மட்டும் டில்லியில் நடக்கின்றன.
நேற்று நடந்த சைக்கிளிங் போட்டியில் ராஜஸ்தானின் ஹர்ஷித்தா, 500 மீ., டைம் டிரையல் பிரிவில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் தபிதாவுக்கு வெண்கலம் கிடைத்தது.
7.5 கி.மீ.,. ஸ்கிராச் ரேஸ் பிரிவில் ஹர்ஷித்தா, 11 நிமிடம், 50.973 வினாடி நேரத்தில் வந்து தங்கம் வசப்படுத்தினார்.
துப்பாக்கிசுடுதல் போட்டியில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் மயங்க் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார்.
கயாவில் நடந்த நீச்சல் போட்டியில் தெலுங்கானாவின் வர்ஷித் (400 மீ., தனிநபர் மெட்லே), சுஹாஸ் (100 மீ., பேக்ஸ்டிரோக்), ஸ்ரீ நித்யா (100 மீ., பேக்ஸ்டிரோக்) என மூவரும் தங்கம் கைப்பற்றி அசத்தினர்.
ஜூடோ போட்டியில் அசத்திய திவ்யா (44 கிலோ), குஷ்பு (57 கிலோ) குஜராத் அணிக்கு முதல் இரு தங்கம் வென்று தந்தனர்.
இதுவரை நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி, 6 தங்கம், 2 வெள்ளி என 8 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடக அணி (5 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம்) இரண்டாவதாக உள்ளது. மஹாராஷ்டிரா (5 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் உள்ளது.