/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜோரான டார்ஜன்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
/
ஜோரான டார்ஜன்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூன் 27, 2024 09:41 PM

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் (1924, மே 4 - ஜூலை 27) 8வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. 6.25 லட்சம் ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். 44 நாடுகளில் இருந்து 3089 பேர் (2954 வீரர், 135 வீராங்கனைகள்) போட்டிகளில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் நீச்சல் வீரர் ஜானி வெய்ஸ் முல்லர், 1924, ஜூலை 20ல் ஒரே நாளில் 100 மீ., 400 மீ., 'பீரீஸ்டைல்' நீச்சலில் தங்கம் வென்றார். அதேநாளில் 'வாட்டர் போலோ' போட்டியில் வெண்கலம் கைப்பற்றினார். இவரது உடல் வலிமையை கண்ட 'ஹாலிவுட்' தயாரிப்பாளர்கள், டார்ஜன் வேடத்தில் நடிக்க அழைத்தனர். ஒலிம்பிக் களத்தில் அசத்திய இவர், டார்ஜனாக 20 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 'வேகம், உயரம், வலிமை' என்ற ஒலிம்பிக்கின் லட்சிய வாசகம் 1924ல் அறிமுகப்படுத்தப்பட்டது. விளையாட்டு நட்சத்திரங்கள் தங்குவதற்கு ஒலிம்பிக் கிராமம் முதன்முறையாக அமைக்கப்பட்டது. மாரத்தான் ஓட்டத்துக்கான துாரம் 42.195 கி.மீ., என நிர்ணயிக்கப்பட்டது.
எக்ஸ்டிராஸ்
99 பதக்கம்
அமெரிக்கா 45 தங்கம், 27 வெள்ளி, 27 வெண்கலம் என 99 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. பின்லாந்து (14 தங்கம், 13 வெள்ளி, 10 வெண்கலம்) 2வது இடத்தை தட்டிச் சென்றது. போட்டியை நடத்திய பிரான்சுக்கு 3வது இடம் (13 தங்கம், 15 வெள்ளி, 10 வெண்கலம்) கிடைத்தது.