/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
கோப்பை வென்றார் அல்காரஸ்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
/
கோப்பை வென்றார் அல்காரஸ்: பிரெஞ்ச் ஓபனில் அசத்தல்
ADDED : ஜூன் 10, 2024 12:31 AM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-3' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 21, உலகின் 'நம்பர்-4' ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 27, மோதினர்.
முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய அல்காரஸ், இரண்டாவது செட்டை 2-6 என இழந்தார். மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய ஸ்வெரேவ் 7-5 என தன்வசப்படுத்தினார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 4வது செட்டை 6-1 என மிகச்சுலபமாக வென்றார். இதனையடுத்து போட்டியின் முடிவு 5வது செட்டுக்கு சென்றது. இதில் அசத்திய அல்காரஸ் 6-2 எனக் கைப்பற்றினார்.
நான்கு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த பைனலில் அல்காரஸ் 6-3, 2-6, 5-7, 6-1, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். தவிர இது, இவரது 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே யு.எஸ்., ஓபன் (2022), விம்பிள்டனில் (2023) கோப்பை வென்றிருந்தார். இவருக்கு கோப்பையுடன் ரூ. 21.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.