ADDED : ஜூன் 06, 2024 11:59 PM

புதுடில்லி: போர்ச்சுகல் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் அன்கிதா ரெய்னா.
போர்ச்சுகலில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ஜெர்மனியில் ஏஞ்சலினாவை எதிர்கொண்டார். முதல் செட்டை அன்கிதா 6-3 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட் 6-6 என இழுபறியானது. கடைசியில் 'டை பிரேக்கர்' வரை சென்று 6-7 என இழந்தார் அன்கிதார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது, கடைசி செட்டில் சுதாரித்துக் கொண்ட அன்கிதா, 6-3 என வசப்படுத்தினார்.
இரண்டு மணி நேரம், 57 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
ராஷ்மிகா தோல்வி
தென் கொரியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, 6-2, 2-6, 4-6 என்ற செட்டில் ஆஸ்திரேலியாவின் பெட்ராவிடம் தோல்வியடைந்தார்.