/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
காலிறுதியில் ஸ்வியாடெக் * ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
/
காலிறுதியில் ஸ்வியாடெக் * ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
காலிறுதியில் ஸ்வியாடெக் * ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
காலிறுதியில் ஸ்வியாடெக் * ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
ADDED : ஜன 20, 2025 10:52 PM

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ஸ்வியாடெக் முன்னேறினார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், உலகின் 'நம்பர்-2' வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் இவா லைய்சை ('நம்பர்-128') சந்தித்தார். ஒரு மணி நேரம் நடந்த இப்போட்டியில் ஸ்வியாடெக் 6-0, 6-1 என எளிதாக வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் உக்ரைனின் ஸ்விட்டோலினா, ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவா மோதினர். இதில் 6-4, 6-1 என எளிதாக வென்றார் ஸ்விட்டோலினா. இவர், ஆஸ்திரேலிய ஓபனில் 3வது, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 12வது முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
உலகின் 'நம்பர்-6' வீராங்கனை கஜகஸ்தானின் ரிபாகினா, 3-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மடிசன் கீசிடம் ('நம்பர்-14') தோல்வியடைந்தார். அமெரிக்காவின் நவாரோ, 6-4, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கசட்கினாவை வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
சின்னர் அபாரம்
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீரர் இத்தாலியின் சின்னர், டென் மார்க்கின் ஹோல்கர் ரூனே ('நம்பர்-13') மோதினர். இதில் சின்னர் 6-3, 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்ற போட்டிகளில் இத்தாலியின் சொனேகோ, ஆஸ்திரேலியாவின் டி மினார் உள்ளிட்டோர் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.