sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

பைனலில் சபலென்கா--மடிசன் கீஸ் * ஆஸி., ஓபனில் பலப்பரீட்சை

/

பைனலில் சபலென்கா--மடிசன் கீஸ் * ஆஸி., ஓபனில் பலப்பரீட்சை

பைனலில் சபலென்கா--மடிசன் கீஸ் * ஆஸி., ஓபனில் பலப்பரீட்சை

பைனலில் சபலென்கா--மடிசன் கீஸ் * ஆஸி., ஓபனில் பலப்பரீட்சை


ADDED : ஜன 23, 2025 10:57 PM

Google News

ADDED : ஜன 23, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.

பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் சபலென்கா, ஸ்பெயினின் பவுலா படோசா ('நம்பர்-11') மோதினர். ஒரு மணி நேரம், 27 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சபலென்கா, 6-4, 6-2 என எளிதாக வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

ஸ்வியாடெக் தோல்வி

மற்றொரு அரையிறுதியில் 'நம்பர்-2' வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மடிசன் கீசை ('நம்பர்-14') எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்வியாடெக் 7-5 என வென்றார். இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற மடிசன் கீஸ், 6-1 என கைப்பற்றி பதிலடி தந்தார். அரையிறுதிக்கு முன், 5 போட்டியில் 14 'கேம்' மட்டும் எதிரணி வீராங்கனைகளுக்கு விட்டுத்தந்த ஸ்வியாடெக், முதன் முறையாக செட்டை இழந்தார்.

மூன்றாவது செட் இழுபறி (6-6) ஆனது. இதனால் 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் 10-8 என முன்னிலை பெற்று, மூன்றாவது செட்டை 7-6 என வசப்படுத்தினார் மடிசன் கீஸ்.

2 மணி நேரம், 37 நிமிட போட்டியின் முடிவில் மடிசன் கீஸ் 5-7, 6-1, 7-6 என வென்று, முதன் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பைனலுக்கு முன்னேறினார்.

நாளை நடக்கும் பைனலில் சபலென்கா 26, மடிசன் கீஸ் 29, பலப்பரீட்சை நடத்த உள்ளனர். கடந்த இரு முறை சாம்பியன் ஆன சபலென்கா, வென்றால் 'ஹாட்ரிக்' கோப்பை கைப்பற்றலாம்.






      Dinamalar
      Follow us