/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
இரண்டாவது சுற்றில் போபண்ணா ஜோடி
/
இரண்டாவது சுற்றில் போபண்ணா ஜோடி
ADDED : மே 13, 2024 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோம்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.
இத்தாலியில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் அர்னால்டி, பாஸ்சாரோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6-2 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட போபண்ணா ஜோடி 6-2 என மீண்டும் வசப்படுத்தியது. 53 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா-எப்டன் ஜோடி 6-2, 6-2 என எளிதாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.