
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி தோல்வியடைந்தது.
அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, பிரான்சின் ஆர்தர் பில்ஸ், சிலியின் நிக்கோலஸ் ஜார்ரி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 4-6 என இழந்த போபண்ணா ஜோடி, 'டை பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' ஏமாற்றிய இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி 8-10 எனக் கோட்டைவிட்டது. முடிவில் போபண்ணா, எப்டன் ஜோடி 4-6, 7-6, 8-10 என்ற கணக்கில் தோல்வியடைந்த வெளியேறியது.

