/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அரையிறுதியில் போபண்ணா ஜோடி: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
/
அரையிறுதியில் போபண்ணா ஜோடி: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
அரையிறுதியில் போபண்ணா ஜோடி: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
அரையிறுதியில் போபண்ணா ஜோடி: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
ADDED : ஜூன் 05, 2024 11:05 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டென் ஜோடி முன்னேறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி, பெல்ஜியத்தின் சான்டர் கில்லே, ஜோரன் விலீஜென் ஜோடியை எதிர்கொண்டது.
'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய போபண்ணா ஜோடி, இரண்டாவது செட்டை 5-7 என போராடி இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி 6-1 என மிகச் சுலபமாக வென்றது. இரண்டு மணி நேரம், 4 நிமிடம் நீடித்த போட்டியில் போபண்ணா, எப்டென் ஜோடி 7-6, 5-7, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக (2022, 2024) அரையிறுதிக்குள் நுழைந்தது.
கார்லஸ் கலக்கல்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-3, 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-2, 6-4, 7-6 என பல்கேரியாவின் டிமிட்ரோவை வீழ்த்தினார். அரையிறுதியில் சின்னர், அல்காரஸ் மோதுகின்றனர்.
ரிபாகினா ஏமாற்றம்
பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி மோதினர். இதில் பவுலினி 6-2, 4-6, 6-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா மோதினர். இதில் ஏமாற்றிய சபலெனகா 7-6, 4-6, 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.