
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டுரின்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி மீண்டும் தோல்வியடைந்தது.
இத்தாலியில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரோகன் போண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, எல் சால்வடாரின் மார்சிலோ அரேவலோ, குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 5-7 என போராடி இழந்த இந்தியா-ஆஸ்திரேலிய ஜோடி, இரண்டாவது செட்டை 3-6 எனக் கோட்டைவிட்டது.
ஒரு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய போபண்ணா, எப்டன் ஜோடி 5-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது. முதலிரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா, ஆஸ்திரேலிய ஜோடியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது.

