UPDATED : பிப் 02, 2025 10:00 PM
ADDED : பிப் 02, 2025 03:54 PM

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் வெற்றி பெற்றார்.
சென்னையில், ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார், சுவிட்சர்லாந்தின் லுாகா காஸ்டெல்னுவோ மோதினர். அபாரமாக ஆடிய தமிழகத்தின் மணிஷ் 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிராக் துஹான் 6-4, 6-2 என ரஷ்யாவின் எவ்ஜெனியை வீழ்த்தினார். இந்தியாவின் தேவ் ஜாவியா 6-4, 6-2 என சகவீரர் கீர்த்திவாசனை தோற்கடித்தார். இந்தியாவின் சித்தார்த் விஷ்வகர்மா 6-3, 6-1 என செக்குடியரசின் டொமினிக் பாலனை வென்றார்.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் வருண் வர்மா, சித்தார்த் ரவாத், நிதின் குமார் சின்ஹா, ரிஷாப் அகர்வால், பாரத் நிஷோக் குமரன், சித்தாந்த் பந்தியா தோல்வி அடைந்தனர்.
தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் மணிஷ், துஹான், ஜாவியா, விஷ்வகர்மா வெற்றி பெறும் பட்சத்தில் ஒற்றையர் பிரதான சுற்றில் விளையாடலாம்.