sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

டென்னிஸ்

/

சீன ஓபன்: அல்காரஸ் 'சாம்பியன்'

/

சீன ஓபன்: அல்காரஸ் 'சாம்பியன்'

சீன ஓபன்: அல்காரஸ் 'சாம்பியன்'

சீன ஓபன்: அல்காரஸ் 'சாம்பியன்'


ADDED : அக் 02, 2024 08:26 PM

Google News

ADDED : அக் 02, 2024 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரஸ் கோப்பை வென்றார்.

சீனாவின் பீஜிங்கில், ஏ.டி.பி., சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பைனலில், 'நடப்பு சாம்பியன்' உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் 'நம்பர்-3' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை சின்னர் 7-6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், இரண்டாவது செட்டை 6-4 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதில் அசத்திய அல்காரஸ் 7-6 என வென்றார்.

மூன்று மணி நேரம், 21 நிமிடம் நீடித்த போட்டியில் அல்காரஸ் 6-7, 6-4, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சீன ஓபனில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, அல்காரஸ் வென்ற 16வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம் ஆனது. தவிர இவர், இந்த ஆண்டு ஜானிக் சின்னருக்கு எதிராக விளையாடிய 3 போட்டியிலும் (இந்தியன் வெல்ஸ், பிரெஞ்ச் ஓபன், சீன ஓபன்) வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக 14 போட்டிகளில் வெற்றி கண்ட சின்னரின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சபாஷ் சபலென்கா: பீஜிங்கில் நடக்கும் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சீன ஓபன் டென்னிஸ் 'ரவுண்டு-16' போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் மடிசன் கீஸ் மோதினர். இதில் சபலென்கா 6-4, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் டபிள்யு.டி.ஏ., அரங்கில் 2வது முறையாக தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வெற்றி கண்டார். இதற்கு முன் 2020-21 சீசனில் இப்படி சாதித்திருந்தார்.






      Dinamalar
      Follow us