/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சின்சினாட்டி ஓபன்: கோகோ காப் வெற்றி
/
சின்சினாட்டி ஓபன்: கோகோ காப் வெற்றி
ADDED : ஆக 11, 2025 10:15 PM

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் ஜின்யு வாங் மோதினர். அபாரமாக ஆடிய கோகோ காப் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 2-6, 6-4, 6-3 என உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை தோற்கடித்தார்.
மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-4, 6-3 என ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல்லை வென்றார். டென்மார்க்கின் கிளாரா டாசன் 6-3, 6-7, 6-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜஜோவிச்சை வீழ்த்தினார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் சோபியா கெனின், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், பிரான்சின் கரோலின் கார்சியா தோல்வியடைந்தனர்.