/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சின்சினாட்டி டென்னிஸ்: காலிறுதியில் கோகோ காப்
/
சின்சினாட்டி டென்னிஸ்: காலிறுதியில் கோகோ காப்
ADDED : ஆக 15, 2025 09:59 PM

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு அமெரிக்காவின் கோகோ காப் முன்னேறினார்.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் லுாசியா பிரான்செட்டி மோதினர். அபாரமாக ஆடிய கோகோ காப் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா மோதினர். இதில் பாவோலினி 6-1, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவா 6-4, 6-3 என போலந்தின் மாக்டா லினெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். பிரான்சின் வார்வரா கிராச்சேவா 2-6, 6-1, 6-1 என ஜெர்மனியின் எலா சீடலை தோற்கடித்தார்.