/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
சின்சினாட்டி டென்னிஸ்: பைனலில் ஸ்வியாடெக்
/
சின்சினாட்டி டென்னிஸ்: பைனலில் ஸ்வியாடெக்
ADDED : ஆக 18, 2025 04:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் பைனலுக்கு போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் முன்னேறினார்.
அமெரிக்காவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, ரஷ்யாவின் வெரோனிகா குடர்மெடோவா மோதினர். இரண்டு மணி நேரம், 20 நிமிடம் நீடித்த போட்டியில் பாவோலினி 6-3, 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.