/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
கோகோ காப் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஏமாற்றம்
/
கோகோ காப் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஏமாற்றம்
கோகோ காப் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஏமாற்றம்
கோகோ காப் அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஏமாற்றம்
ADDED : செப் 02, 2024 11:18 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் கோகோ காப் தோல்வியடைந்தார்.
நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், எம்மா நவரோ மோதினர். இதில் ஏமாற்றிய கோகோ காப் 3-6, 6-4, 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைக்க தவறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-4 என பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை வீழ்த்தினார். ஸ்பெயினின் படோசா 6-1, 6-2 என சீனாவின் யபான் வாங்கை வீழ்த்தினார். மற்றொரு 4வது சுற்றில், பாரிஸ் ஒலிம்பிக் தங்கம் வென்ற சீனாவின் கின்வென் ஜெங், வெள்ளி கைப்பற்றிய குரோஷியாவின் டோனா வெகிக் மோதினர். இரண்டு மணி நேரம், 50 நிமிடம் நீடித்த போட்டியில் சீன வீராங்கனை 7-6, 4-6, 6-2 என வெற்றி பெற்றார். இது, யு.எஸ்., ஓபன் வரலாற்றில் அதிகாலை (2.15 மணி) வரை நீடித்த பெண்கள் போட்டியானது.
காலிறுதியில் ஸ்வெரேவ்: ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் பிரண்டன் நகாஷிமா மோதினர். இதில் ஸ்வெரேவ் 3-6, 6-1, 6-2, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் பல்கேரியாவின் டிமிட்ரோவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சிஸ், தியாபோ வெற்றி பெற்றனர்.