/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
நான்காவது சுற்றில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
/
நான்காவது சுற்றில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
நான்காவது சுற்றில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
நான்காவது சுற்றில் கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்
ADDED : மே 31, 2024 10:40 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றுக்கு அமெரிக்காவின் கோகோ காப் முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் டயானா யாஸ்டிரெம்ஸ்கா மோதினர். இதில் கோகோ காப் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் சாம்சோனோவா 6-7, 2-6 என இத்தாலியின் எலிசபெட்டா கோசியாரெட்டோவிடம் தோல்வியடைந்தார். செர்பியாவின் டானிலோவிச் 0-6, 7-5, 7-6 என குரோஷியாவின் டோனா வேகிக்கை போராடி வீழ்த்தினார். மற்ற 3வது சுற்றுப் போட்டிகளில் போலந்தின் இகா ஸ்வியாடெக், துனிசியாவின் ஜபீர் வெற்றி பெற்றனர்.
இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-0, 7-6 என எகிப்தின் மேயர் ஷெரிப்பை தோற்கடித்தார்.