/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
டேவிஸ் கோப்பை: இந்தியா ஏமாற்றம்
/
டேவிஸ் கோப்பை: இந்தியா ஏமாற்றம்
ADDED : செப் 15, 2024 11:14 PM

ஸ்டாக்ஹோம்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1' போட்டியில் இந்திய அணி, சுவீடனிடம் தோல்வியடைந்தது.
சுவீடனில் நடந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்---1' போட்டியில் இந்தியா, சுவீடன் அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தனர்.
இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சுவீடனின் பிலிப் பெர்கேவி, ஆன்ட்ரி கோரன்சன் ஜோடியை சந்தித்தது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய ஜோடி, முதல் செட்டை 3-6 என இழந்தது. தொடர்ந்து ஏமாற்றிய இந்திய ஜோடி, 2வது செட்டை 4-6 எனக் கோட்டைவிட்டது. முடிவில் ஸ்ரீராம், ராமநாதன் ஜோடி 3-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தது.
அடுத்து நடந்த மாற்று ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சித்தார்த் விஷ்வகர்மா 2-6, 2-6 என சுவீடனின் எலியாஸ் யெமரிடம் வீழ்ந்தார்.
இதனையடுத்து இந்திய அணி 0-4 என தோல்வியடைந்தது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'வேர்ல்டு குரூப்' பைனலுக்கான 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறத்தவறிய இந்திய அணி, 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்றுக்கு தள்ளப்பட்டது. தவிர இது, டேவிஸ் கோப்பையில் சுவீடனுக்கு எதிராக இந்திய அணியின் 6வது தோல்வியானது.