/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
டேவிஸ் கோப்பை: சாதிக்குமா இந்தியா
/
டேவிஸ் கோப்பை: சாதிக்குமா இந்தியா
ADDED : செப் 13, 2024 10:28 PM

ஸ்டாக்ஹோம்: டேவிஸ் கோப்பை டென்னிசில் இன்று இந்தியா, சுவீடன் அணிகள் மோதுகின்றன.
சுவீடனில் இன்று டேவிஸ் கோப்பை டென்னிஸ், 'வேர்ல்டு குரூப்-1' போட்டி துவங்குகிறது. இதில் இந்தியா, சுவீடன் அணிகள் மோதுகின்றன. இந்திய அணியில் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன், சித்தார்த் விஷ்வகர்மா, நிக்கி பூனாச்சா, ஆர்யன் ஷா இடம் பெற்றுள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது.
இன்று இரண்டு ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி, சுவீடனின் 'நம்பர்-1' வீரர் எலியாஸ் யெமரை சந்திக்கிறார். மற்றொரு போட்டியில் ராம்குமார் ராமநாதன், சுவீடன் ஜாம்பவான் பிஜோர்ன் போர்க்கின் மகனான லியோ போர்க்கை எதிர்கொள்கிறார்.
நாளை இரட்டையர், மாற்று ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடக்கின்றன. இரட்டையரில் ஸ்ரீராம் பாலாஜி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சுவீடனின் பிலிப் பெர்கேவி, ஆன்ட்ரி கோரன்சன் ஜோடியை சந்திக்கிறது.
டேவிஸ் கோப்பை அரங்கில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 5 போட்டியிலும் (1985, 1987, 1996, 2000, 2005) சுவீடன் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பைனலுக்கான 'பிளே-ஆப்' சுற்றில் விளையாட முன்னேறும். தோல்வியடையும் அணி, 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' சுற்றுக்கு தள்ளப்படும்.