/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
ஜோகோவிச் விலகல்: சின்சினாட்டி ஓபன் டென்னிசில்
/
ஜோகோவிச் விலகல்: சின்சினாட்டி ஓபன் டென்னிசில்
ADDED : ஆக 09, 2024 10:15 PM

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து செர்பியாவின் ஜோகோவிச் விலகினார்.
அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஆக. 13-19ல் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 'நடப்பு சாம்பியன்' செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் நியூயார்க்கில் நடக்கவுள்ள யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கு (ஆக. 26-செப். 8) தயாராகும் விதமாக சின்சினாட்டி ஓபனில் இருந்து ஜோகோவிச் விலகினார்.
இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், பாரிஸ் ஒலிம்பிக் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரசை வீழ்த்தி முதன்முறையாக ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். யு.எஸ்., ஓபனில் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கும் ஜோகோவிச் சாதிக்கும் பட்சத்தில் தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம்.
சின்சினாட்டி ஓபனில் ஜோகோவிச் விலகியதால், பிரான்ஸ் வீரர் ஜியோவானி எம்பெட்ஷி பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றார்.