/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
பிரெஞ்ச் ஓபன்: அல்காரஸ் வெற்றி
/
பிரெஞ்ச் ஓபன்: அல்காரஸ் வெற்றி
ADDED : மே 26, 2024 09:37 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ், ஜப்பானின் ஒசாகா வெற்றி பெற்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் வோல்ப் மோதினர். அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-4, 6-3, 6-4 என அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசிவிக்கை தோற்கடித்தார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இத்தாலியின் லோரென்சோ சோனேகோ, ரஷ்யாவின் ஆன்ட்ரி ரூப்லெவ் வெற்றி பெற்றனர்.
ஒசாகா வெற்றி
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலியின் லுாசியா புரோன்செட்டி மோதினர். முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றிய ஒசாகா, 2வது செட்டை 4-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர் 7-5 என போராடி வென்றார். முடிவில் ஒசாகா 6-1, 4-6, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் லாட்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-4, 7-5 என ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வென்றார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா, செக்குடியரசின் மேரி பவுஸ்கோவா வெற்றி பெற்றனர்.