/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
அல்காரஸ், ஸ்வியாடெக் அபாரம் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
/
அல்காரஸ், ஸ்வியாடெக் அபாரம் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
அல்காரஸ், ஸ்வியாடெக் அபாரம் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
அல்காரஸ், ஸ்வியாடெக் அபாரம் * பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்...
ADDED : மே 26, 2025 10:06 PM

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ், கஜகஸ்தானின் ரிபாகினா வெற்றி பெற்றனர்.
பிரான்சின் பாரிஸ் நகரில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-2' வீரர், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், தகுதிச்சுற்றில் இருந்து முன்னேறிய இத்தாலியின் ஜெப்பியரியை எதிர்கொண்டார். ஒரு மணி நேரம், 58 நிமிடம் நடந்த போட்டி முடிவில் அல்காரஸ், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
ஸ்வியாடெக் வெற்றி
பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், செக் குடியரசின் ஸ்ரம்கோவா மோதினர். இதில் ஸ்வியாடெக் 6-3, 6-3 என நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் ரிபாகினா, அர்ஜென்டினாவின் ரியராவை 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.
ஒசாகா தோல்வி
ஜப்பானின் ஒசாகா (நம்பர்-49), ஸ்பெயினின் பவுலா படோசாவை (நம்பர்-10) எதிர்கொண்டார். இதில் ஒசாகா 7-6, 1-6, 4-6 என்ற செட்டில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரான்சின் கரோலின் கார்சியா, 4-6, 4-6 என அமெரிக்காவின் பெர்னார்டா பெராவிடம் வீழ்ந்தார்.
மற்ற போட்டிகளில் ரடுகானு (பிரிட்டன்), குடர்மோவானா ஷம்சனோவா (ரஷ்யா), டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா) வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.