
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்துார்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் ராஷ்மிகா, வைதேகி ஜோடி முன்னேறியது.
இந்தியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, லிதுவேனியாவின் ஜஸ்டினாவை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட ராஷ்மிகா 6-0, 6-0 என எளிதாக வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் லட்சென்கோவிடம் 3-6, 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் ராஷ்மிகா, வைதேகி ஜோடி, இந்தியாவின் ஜீல் தேசாய், சஹாஜா ஜோடியை சந்தித்தது. இதில் ராஷ்மிகா, வைதேகி ஜோடி 6-1, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

