ADDED : ஜன 29, 2025 10:25 PM

புனே: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ருடுஜா ஜோடி முன்னேறியது.
இந்தியாவின் புனேயில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ருடுஜா போசாலே, பிரிட்டனின் பார்னெட் ஜோடி, பிரிட்டனின் மியாஜகி, லிச்டென்ஸ்டெய்னின் கத்தின்கா ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை ருடுஜா ஜோடி 6-2 என கைப்பற்றியது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-3 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 8 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ருடுஜா ஜோடி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, 6-7, 2-6 என்ற நேர் செட்டில் ஹங்கேரியின் பனா உத்வார்டியிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சஹாஜா, 6-4, 3-6 என பிரான்சின் ஜீன்ஜீனிடம் வீழ்ந்தார்.