ADDED : டிச 19, 2024 11:01 PM

நவி மும்பை: ஐ.டி.எப்., டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சஹாஜா முன்னேறினார்.
இந்தியாவில் (நவி மும்பை) பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, இந்தியாவின் சஹாஜா, ரஷ்யாவின் கருஷ்காவை சந்தித்தார். 1 மணி நேரம், 13 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், சஹாஜா 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, 6-3, 1-6, 3-6 என்ற கணக்கில் போலந்தின் ஜுஜன்னாவிடம் போராடி தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி, 6-1, 6-1 என சக இந்தியாவின் ஷிவானி, ஷ்மிருதி ஜோடியை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. மற்ற காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் ரியா, ஜீல் தேசாய், ராஷ்மிகா, குளம்பயேவா (கஜகஸ்தான்) ஜோடி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தன.