
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரு டென்னிஸ் முதல் சுற்றில் அன்கிதா ரெய்னா, சஹாஜா வெற்றி பெற்றனர்.
பெங்களூருவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யாவின் குடாஷோவா மோதினர். இரண்டு செட்டும் 'டை பிரேக்கர்' வரை சென்றது. இதை அன்கிதா 7-6, 7-6 என கைப்பற்றி, நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் சஹாஜா, பிரிட்டனின் மியாஜகியை சந்தித்தார். இதில் சஹாஜா, 6-3, 3-6, 6-0 என்ற செட்டில் போராடி வெற்றி பெற்றார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் இந்தியாவின் ராஷ்மிகா, வைதேகி உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.